75-வது சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு.

0

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் தேசிய கொடி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தேசிய கொடியை நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலமாகவும் விற்பனை செய்தனர்.

அந்த வகையில் மட்டும் சுமார் 2 கோடி தேசிய கொடி விற்பனை ஆகியுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் தேசிய கொடி தயாரித்து வழங்கப்பட்டது.

ரூ.25 முதல், ரூ.5 ஆயிரம் வரை தேசிய கொடிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இன்று காலை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

தேசிய கொடியை பயன்படுத்தும் போது எதையெல்லாம் செய்யக்கூடாது.

எதையெல்லாம் செய்யலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருந்தது.

அதை கடைபிடித்து பொதுமக்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள்.

பல்வேறு மாநிலங்களிலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றினார்கள்.

மும்பையில் இந்தி நடிகர்கள் போட்டி போட்டு தேசிய கொடியை தங்களது வீடுகளில் பறக்க விட்டனர்.

அவர்கள் அனைவரும் அதை செல்பி எடுத்தும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதன் காரணமாக சாதாரண பொதுமக்களிடமும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று கடைகளில் சிறிய ரக தேசிய கொடி விற்பனை அதிக அளவில் விறுவிறுப்புடன் நடைபெற்றது.

தேசிய கொடிகள் ஏற்றப்பட்டதால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் மூவர்ண மயமாக காணப்பட்டது.

சென்னையில் அரசு கட்டிடங்கள் மற்றும் நினைவிடங்களில் மூவர்ண அலங்கார விளக்கு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் மூவர்ணமாக கட்டிடங்கள் ஜொலித்தன. வருகிற 15-ந் தேதி வரை மூவர்ண கோலாகலத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

இதனால் நாடு முழுவதும் நாட்டின் 75-வது சுதந்திர தினம் மக்கள் மத்தியில் தேசப்பற்றை பிரதிபலிக்கும் வகையில் மாறி வருகிறது.

Leave a Reply