கேரளாவில் 2-ஆம் திகதி வரை கனமழைக்கு வாய்ப்பு.

0

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

தற்போது மலையோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டுகிறது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளா முழுவதும் வருகிற 2-ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

நேற்றும் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

Leave a Reply