ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
இதற்கமைய குறித்த சந்திப்பு நாளைய தினம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின் நடைபெறும் முதல் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வகட்சி அரசாங்கம் அமைத்தல், அவசரகால சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றிக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.



