ஸ்ரீ துர்க்கை அம்மனை ராகு கால வேளையில் வழிபாடு செய்வது என்பது ரொம்பவே பிரசித்தி பெற்ற பரிகாரமாக இருந்து வருகிறது. எத்தகைய தடைகளையும் அகற்றக் கூடிய அதிசக்தி வாய்ந்த இந்த துர்க்கை அம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டு வருபவர்களுக்கு தீராத துன்பமெல்லாம் தீருவதாக நம்பிக்கை இருந்து வருகிறது. இத்தகைய துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமையில் எப்படி வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம்? என்பதை பற்றிய ஆன்மிக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
துர்க்கை அம்மன் வழிபாடு ராகு காலத்தில் செய்யப்படுவது ரொம்ப விசேஷமானது அசுரர்களை அழிக்க வந்த இந்த அம்மன் குலதெய்வமாக இருந்தாலும், வேண்டிய வரத்தை வேண்டியபடி கொடுப்பதில் இஷ்ட தெய்வமாகவும் பக்தர்களுக்கு இருந்து வருகிறாள். துர்க்கை அம்மன் வழிபாட்டைச் செவ்வாயும், ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமையில் செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
செவ்வாயில் ராகு கால வேளையில் செய்வது போல வெள்ளிக் கிழமையிலும் ராகு கால வழிபாடு செய்வது ரொம்ப விசேஷமானது! துர்க்கை அம்மன் வழிபாட்டை பொதுவாக வீடுகளில் செய்யக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. ஆனால் அது உண்மையல்ல, துர்க்கை அம்மனுக்கு சுத்தபத்தமாக இருந்து வெள்ளிக்கிழமையில் வீட்டிலேயே கூட அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்து வழிபடலாம்.
பெண்கள், குழந்தைகள் தொடர்பான எத்தகைய விஷயங்களையும் துர்க்கை அம்மனிடம் ஒப்படைத்தால் அது உடனே தீரும். அந்த வகையில் வெள்ளிக்கிழமையில் ஒவ்வொரு வாரமும் நீங்கள் துர்க்கை அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தீராத துன்பங்கள் தீரும், மாங்கல்ய பலம் நிலைக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்கவும் இது போல துர்க்கை அம்மன் வழிபாட்டை வெள்ளிக்கிழமையில் மேற்கொள்ளலாம்்
.வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மன் படத்தை வைத்து அகல் விளக்கு தீபம் இரண்டு வைத்து அதில் ஐந்து நூல்கள் கொண்ட நூல் திரியில் தீபம் ஏற்ற வேண்டும். மெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும் ஊற்ற வேண்டும். வீடுகளில் துர்க்கை அம்மனை வழிபடுபவர்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடக் கூடாது. கோவிலில் மட்டுமே எலுமிச்சை தீபம் ஏற்ற வேண்டும். ராகு கால தீபம் ஏற்றுபவர்கள் ராகு காலம் முடிவதற்குள் கோவிலை விட்டு வெளியேறி விட வேண்டும். வீட்டில் வழிபடுபவர்கள் அகல் விளக்கில் நூல் திரியிட்டு அதன் முனைப்பகுதியில் கொஞ்சம் கற்பூரத்தை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
துர்க்கை அம்மனுக்கு ரொம்பவும் பிடித்தது தேங்காய் சாதம் எனவே தேங்காய் சாதம் நெய் வைத்தியம் வைத்து வழிபடலாம் அல்லது பாயாசம் கூட நைவேத்தியம் படைத்து வழிபடலாம். ராகு காலம் வெள்ளிக் கிழமையில் ராகு கால வேளை என்பது 10:30 மணி முதல் 12 மணி வரையிலான காலகட்டம் ஆகும். இந்நேரத்தில் நீங்கள் துர்க்கை அம்மனுக்கு இது போல வழிபட்ட மனமுருக வேண்டினால் உங்களுடைய வேண்டுதல் யாவும் பலிக்கும். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், அது பஞ்சு போல பறந்து ஓடிவிடும். ரொம்ப சக்தி வாய்ந்த இந்த துர்க்கை அம்மன் வழிபாட்டை வெள்ளிக்கிழமையில் இங்கனம் மேற்கொண்டு அனைவரும் பயனடையலாமே. –
