சுகாதார ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்காது என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



