வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபடவும் முன்ஜென்ம பாவத்திலிருந்து விமோசனம் பெறவும் இந்த பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும்.

0

ஒரு சிலர் தங்கள் வாழ்நாளில் முடிந்தவரை முயற்சி செய்து தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமென்று போராடிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களின் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இருப்பதில்லை.

சந்திரனின் கோபமும் இதற்குக் காரணமாக இருக்கலாம், அல்லது முன் ஜென்மத்தில் உங்கள் பெற்றோர்கள் கொடுத்த சாபமாகவும் இருக்கலாம்.

எந்த ஒரு மனிதனும் தங்களின் தாய், தந்தையின் மனதை புண்படுத்த கூடாது. அப்படி அவர்களின் மனதை காயப்படுத்தினால் சந்திரனின் கோபப் பார்வைக்கு ஆளாகிவிடுவோம்.

சந்திர தோஷம் ஏற்பட்டு விட்டால் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. எனவே இந்த தோஷம் மற்றும் சாபத்திலிருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்தால் மட்டும் போதும்.

வாருங்கள் இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நிச்சய கர்மா’ எனப்படும் நிலையான விதி, ஜாதகரால் முன் ஜென்மத்தில் நிகழ்த்தப்பட்ட தாகும்.

இதை எவராலும் மாற் றவோ திருத்தவோ முடியாது. ஒரு ஜாதகத்தில் இவற்றை ஆராயும் போது, விதிப்படி எவ்வகை வினைகள் செய்யப்பட்டுள்ளன- அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பரிந்துரைக்கலாம்.

சந்திரனால் ஏற்பட்ட தோஷம், விலக அவருக்குகந்த பொருட்களை நம் கைகளால் தூக்கி எறியும் போதே நம் உடலைவிட்டு நீங்கிவிடுகிறது.

பொதுவாக சாபத்திற்கான பரிகாரங்கள் ஒருசில முறைகள் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

மற்ற பரிகாரங்கள் 43 நாட்கள் செய்யப்பட வேண்டும். நடுவிலேயே நல்லபலன் தெரிந்தாலும் முழுமையாக 43 நாட்கள் இப்பரிகாரங்களைச் செய்வதே உசிதமாகும். அப்போதுதான் நிரந்தரமாக தோஷ பாதிப்புகள் மறையும்.

சந்திர தோஷத்துக்கான எளிமையான பரிகாரம் தாயை தினமும் வணங்கி ஆசிபெறுதே. தாயால் கொடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்திருத்தல், வெள்ளியினாலான காப்பு அல்லது மோதிரத்தைக் கையில் அணிந்து, அதை 43 நாட்களுக்குத் தொடரவேண்டும்.

இதற்குப் பின்னுள்ள விஞ்ஞான நிகழ்வு என்னவெனில், இந்தப் பொருட்களை நதியில் விடும்போது நமது உட-ல் சந்திரனால் ஏற்பட்ட கர்மாக்களின் பாவங்கள் நதியோடு கரைந்துவிடுகின்றன என்பதே.

அதன்காரண மாக குறிப்பிட்ட கிரக பாதிப்பால் ஏற்பட்ட தோஷங்களும், சாபங்களும் நிரந்தரமாக மறைந்துவிடுகின்றன.

இவ்வாறு அரிசியை வீட்டிலும், வெள்ளியை 43 நாட்கள் நமது கையிலும் வைத்துக் கொண்டு, 43 நாட்களுக்கு பிறகு மாலை 6 மணிக்கு மேல் ஓடும் நதியில் இவற்றை விட்டு விட வேண்டும். சந்திரன் இரவு நேரத்தில் தோன்றுவதனால் இதனை இரவு நேரத்தில் தான் செய்ய வேண்டும்.

43 நாட்கள் தொடர்ந்து செய்தால் மட்டுமே சந்திரதோஷத்தில் இருந்தும், பெற்றோர்களின் சாபத்திலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.

Leave a Reply