நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசியதாவது-
மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நான் முதல்-அமைச்சருடைய வார்த்தைகளில் இருந்து எடுத்துச் சொல்கிறேன். தந்தை பெரியார் பேசிய சமூக சீர்திருத்த கோட்பாடுகள், சீர்திருத்தக்கருத்துக்கள், அரசியல் பொருளாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியுனுடைய அடிப்படையில் அடுத்த பரிணாமமாக அதை கொண்டு சேர்க்கக் கூடிய கட்டம்.



