முற்றாக நின்று போயுள்ள மருந்து விநியோகம்.

0

நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்களுக்கான மருந்து விநியோகம் முற்றாக நின்று போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இல்லாத காரணத்தினால், மருந்து தொகைகளை தனியார் மருந்தகங்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த தெரிவித்துள்ளார்.

மருந்து விநியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாது போயுள்ளது.

அத்துடன் அரச மருத்துவமனைகளிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply