இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் யூரியா பசளை ஒரு மூடை வீதம் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.
மஹிந்த அமரவீர கலந்துரையாடல்
உலக உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் அதிகாரிகளுடன் கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இலங்கையில் குறைந்த வருமானத்தைக் கொண்ட மூன்று இலட்சத்து அறுபத்து ஐயாயிரம் குடும்பங்களுக்கு தலா யூரியா பசளை ஒரு மூடை வீதம் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் பெரும்போகம் மற்றும் 2023ம் ஆண்டின் பெரும்போக காலப்பகுதிகளில் இந்த விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இலங்கையில் கமத்தொழில்துறையை மீளக் கட்டியெழுப்ப தேவையான எல்லா உதவிகளையும் செய்வதற்கு குறித்த அமைப்பின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.



