லிட்ரோ நிறுவனம் விடுத்த விசேட அறிவிப்பு.

0

நாட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும், எனவே மக்கள் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை லிட்ரோ நிறுவனத்திடம் போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இல்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply