உரத்தின் விலை 10ஆயிரம் ரூபா!

0

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உரத்தை 10ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு பெற்றுத்தரமுடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தேயிலைக்கு 10ஆயிரம் தொன்
இந்தியாவில் இருந்து கிடைக்கவுள்ள 65ஆயிரம் மெட்றிக் தொன்களில் 10ஆயிரம் தொன் தேயிலை பயிர்ச்செய்கைக்கு வழங்கப்படவுள்ளது.

எனினும் மரக்கறி செய்கைக்கு தனியார் வர்த்தகர்களின் கையிருப்பில் உள்ள உரங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

அவர்களுக்கு செலுத்தப்படவுள்ள 22 பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட பின்னர் அவர்களும் உரத்தை 10ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply