சென்னையில் அதிகரித்து வரும் தங்கம் விலை.

0

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தங்கம் ஒரு பவுன் ரூ.38,200 என்ற விலையிலேயே தொடர்ந்து விற்பனையானது.

கடந்த 30-ந்தேதி (திங்கட்கிழமை) அது ரூ.38,280 ஆக உயர்ந்தது.

அதன்பிறகு 31-ந்தேதி மீண்டும் ரூ.38,200 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.37,920 ஆக குறைந்தது.

அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று பவுன் விலை ரூ.38,080 ஆக உயர்ந்தது. இன்று மேலும் உயர்வடைந்து ரூ.38,400 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் நேற்று ரூ.4,760-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,810-க்கு விற்கப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply