உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் எதிர்காலத்தில் உலக உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் அந்நியச் செலாவணி இல்லாத இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அப்போன்சோ தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதாரம் முழுமையாக உடைந்து விழும் நிலைமை காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



