இலங்கைக்கு வருகை தரவுள்ள 4 கப்பல்கள்.

0

இலங்கைக்கு மேலும் 4 கப்பல்கள் வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 15 நாட்களில் நான்கு டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாளை மற்றும் ஜூன் 1ஆம் திகதிகளில் டீசல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று மற்றும் ஜூன் 29ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் 5 எரிபொருள் தாங்கிகள் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகவும் அதில் ஒன்று கச்சா எண்ணெய்யைக் கொண்டு வந்துள்ளதாகவும் அதற்கு கடந்த 8 நாட்களாக டொலரை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply