நான்கு அமைச்சர்களின் பதவியேற்பு இன்று.

0

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜி.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோரே இவ்வாறு பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகளே வழங்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரம், காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சு, தினேஷ் குணவர்தன கல்வி, பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சு என்பவற்றினை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply