அஷ்ட ஐஸ்வர்யங்களும் தரும் நித்யா தேவி மந்திரம்

0

நித்யா தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்துத்தொல்லைகளும் தானே விலகும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும்.

அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள்.

மந்தகாசமான திருமுகத்தையுடையவள். பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புத்தகம், ஜபமாலை, புஷ்ப பாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள்.

மந்திரம்:

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச தசமி, கிருஷ்ண பட்ச சஷ்டி.

பலன்கள்: அனைத்துத்தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.

– Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply