இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணி புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து செல்லும்.

0

அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இந்நிலையில் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக அதன் பிரதிநிதிகள் தமது சங்கத்தினர் உடன் எந்தவித கலந்துரையாடலும் முன்னெடுக்கவில்லை என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
.

ஆகவே தனது சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply