மே 9 ஆம் திகதிக்கு பின்னர் கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தீவைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிப்பிடப்படுள்ளது.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் குற்றச்செயல்களுக்கு பொறுப்பானவர்கள்; மீது நடவடிக்கை எடுக்கப்படும்
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று எச்சரித்துள்ளார்.
பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறிச் செயல்படுவதால் பாதுகாப்புப் படையினருக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காயுள்ளார்.



