நாட்டின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அரசாங்க ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.
இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்கியதில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
அத்துடன் கலவரம் ஏற்பட்ட காலி முகத்திடலுக்கு சென்ற எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்த எதிர்ப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர்.
மேலும் மறு அறிவித்தல்வரை ஊரடங்கு உத்தவு பிறபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



