கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் 22 வயது இளைஞன் சடலமாக மீட்பு.

0

மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொதுமகன் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம்
கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட நிலையில், சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply