மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவேன் – பிரதமர் அதிரடி.

0

நாட்டு மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் நம்மை நம்பி இந்த நாட்டில் உள்ள 69 லட்சம் மக்கள் வழங்கிய ஆணையை மீற தாம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தாய்நாட்டை முன்னிறுத்தி முதலாவதாக, இரண்டாவதாக, மூன்றாவதாக முன்னெடுக்கும் இந்த அரசியல் இயக்கத்தை விட்டு விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்,

சவால்களை முறியடித்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்வேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று முற்பகல் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகை முன்பாக கூடிய குழுவினரால் அலரி மாளிகைக்கு முன்பு பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply