நீங்கள் போதும் என்று சொன்னாலும் உங்கள் கையில் பணம் புரண்டு கொண்டே இருக்க இந்த சிறிய பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து பாருங்கள்…!!

0

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று இன்றைய சமூகத்தின் சூழ்நிலையைப் பற்றி அன்றே நமது திருவள்ளுவர் சொல்லிவைத்து சென்றுவிட்டார்.

ஒருவருக்கு இறைவனின் அருள் இல்லை என்றால் எவ்வாறு மேலுலகத்தில் இடம் இல்லையோ, அதுபோல பொன், பொருள் நம்மிடம் இல்லை என்றால் இந்த மண்ணுலகமும் நம்மை மதிப்பதில்லை.

என்னதான் கடினமாக உழைத்து, சம்பாதித்தாலும் அதனை நம்மால் சேர்த்து வைக்க முடிவதில்லை.

எதிர்காலத்திற்கு என்று நாம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்தாலும், அதற்கு ஏற்ற ஏதாவது ஒரு பிரச்சனை வந்து விடுகிறது.

இவ்வாறு நாம் செல்வந்தராக வாழ நினைத்தால் நமது முன் வினைகளின் நற்பலனும், இறைவனின் அருளும் இருந்தால் மட்டுமே இது நடைபெறும்.

எனவே இறைவனின் அருளைப் பெறுவதற்காக இந்த எளிய தாந்த்ரீக பரிகாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைத்து விடும். இதனை புதன்கிழமை மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணி அளவில் செய்ய வேண்டும்.

இதற்காக 5 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வெற்றிலையின் காம்புப் பகுதியும், நுனி பகுதியும் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இவற்றை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கைக்குட்டை அளவு பட்டுத் துணியை எடுத்து கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு பசு நெய் எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு வெற்றிலையின் மீது நெய்யை பரவலாக தடவி விட வேண்டும்.

பின்னர் இந்த ஐந்து வெற்றிலையும் பட்டுத்துணியின் நடுவே வைத்து விட்டு, பட்டுத்துணியின் நான்கு முனைகளை வைத்து வெற்றிலையை முழுவதுமாக சுற்றி, ஒரு கயிறு போட்டுக் கட்டி விட வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது மனதிற்குள் உங்கள் குல தெய்வத்திடம் எனது பொருளாதாரப் பிரச்சனை அனைத்தும் தீர்ந்து விடுவதற்கு நீங்கள் ஏதேனும் ஒரு வழி காண்பிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதனை நீங்கள் பணம் வைக்கும் அலமாரியில் வைத்து விட வேண்டும்.

வெற்றிலை மகாலட்சுமியின் அம்சமாகும்.

எனவே இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயம் உங்கள் பொருளாதார நிலைமை உயர்ந்துவிடும்.

Leave a Reply