அந்த அம்பாளே இறங்கி வந்து உங்களோடு இருந்து, உங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பாள்.

0

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு அம்பாள் உங்கள் அருகில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1008 முறை இந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டத்திற்கும் மூன்றே மாதத்தில் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

சில பேருக்கு பணப்பிரச்சனை இருக்கும். சில பேருக்கு மனதளவில் பிரச்சனை இருக்கும். சில பேருக்கு உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கும்.

சிலபேருக்கு கணவன் மனைவிக்குள் பிரச்சினை இருக்கும்.

சில பேருக்கு பிள்ளை வரம் இல்லை என்ற கஷ்டம் இருக்கும்.

சில பேருக்கு திருமணம் நடக்காமல் இருக்கும்.

இப்படி கஷ்டங்களுக்கு வரிசை கட்டிக் கொண்டு செல்லலாம். எந்த கஷ்டமாக இருக்கட்டும்.

நீங்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்த இருந்தாலும் அம்பாளை மட்டும் மனதார நினைத்து கொண்டு பின்வரும் மந்திரத்தை உச்சரியுங்கள்.

ஓம் ஐம் ஸ்ரீம் க்லீம் லலிதா அம்பிகையை நமஹ!

அவ்வளவு தாங்க. மனசார அம்பிகையை வேண்டிக்கொண்டு தினந்தோறும் இந்த மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் படிப்படியாக ஏற்படும்.

மொத்த பாரத்தையும் அம்பாளின் பாதங்களில் இறக்கி வைத்து விட்டு கடமையை செய்யுங்கள்.

கஷ்டங்கள் படிப்படியாக குறையும். பிறவிக்கடன் முதல், நீங்கள் கைநீட்டி வாங்கிய கடன் வரை எல்லா பிரச்சினைகளும் தீரும்.

எங்களுக்கு 1008 முறை பூஜை அறையில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க நேரமில்லை என்றாலும் பரவாயில்லை.

காலையில் எழுந்து பூஜை அறையில் மூன்று முறை இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு, அதன் பின்பு நீங்கள் வேலை இல்லாமல் எப்போதெல்லாம் வெறுமனே அமர்ந்து கொண்டு இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் மனதிற்குள் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

இத்தனை முறைதான் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கடவுளுக்கு கிடையாது. ஒரு மனத் திருப்திக்காக தான் 108 1008 என்ற கணக்கை நாம் சொல்கின்றோம்.

இந்த மந்திரத்தை எத்தனை முறை திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு கஷ்டங்கள் உங்களை விட்டு சீக்கிரமாக தூரம் சென்று விடும் என்பதுதான் நம்பிக்கை.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Leave a Reply