அலரி மாளிகைக்கு முன்பு உருவான பதற்ற நிலை.

0

கொழும்பில் அலரி மாளிகைக்கு முன்பாக கடுமையான பதற்ற நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இடையூறு விளைவிக்கும் வகையில் அலரி மாளிகைக்கு முன்பாக பேருந்துகள் மற்றும் பார ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தது.

அவற்றை அகற்றுவதற்கு கொல்லப்பட்டு காவல்துறையினர் என்று முயற்சி மேற்கொண்டனர்.

குறித்த முயற்சியின்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்து மற்றும் பாரவூர்திகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் முறைப்பாடு அளிக்க சென்றிருந்தனர்.

அதன்போது குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பாக தகவல் தனக்கு தெரியாதென கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்ததாக அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் பிரகாரம் இன்று காலை பேருந்தை காவல்துறையினர் அகற்றுவதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதன் போது நடத்தப்பட்ட தாக்குதல்களினால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply