பேருந்துகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசல் மண்ணெண்ணெய் போன்ற துர்நாற்றத்தை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகளுக்கு விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசலின் தரத்தில் பிரச்சினை இருப்பதாக
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகவியலாளர்களிடம் இரண்டு டீசல் மாதிரிகளை காண்பித்த அவர், ஒரு மாதிரி மண்ணெண்ணெய் துர்நாற்றம் வீசுவதாகவும் மற்றும் ஒன்றில் எவ்வித நாற்றமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்



