வீட்டில் இந்த திசையில் விநாயகரை வைத்து வணங்கினால் செல்வம் பெருகும்..!

0

விநாயகரின் பின்புறம் வறுமையை குறிக்கும். எனவே விநாயகரின் பின்புறம் வீட்டின் எந்தவொரு அறையினையும் பார்த்தவாறு வைக்காமல், வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தவாறு வைக்க வேண்டும்.

விநாயகரை தென்புற திசையில் வைத்து வணங்கக் கூடாது. கிழக்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வணங்கினால் வீட்டின் செல்வம் அதிகரிக்கும்.

கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரின் சிலயை வைக்கக் கூடாது. அதேபோல அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக் கூடாது. வீட்டிற்குள் மாடிப்படி இருந்தால் அதன் அடியில் விநாயகரை வைக்கக் கூடாது. ஏனெனில் அது துரதிஷ்டத்தை உண்டாக்கும்.

உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை கிழக்கு அல்லது மேற்கு திசையினை நோக்கி வைத்து வணங்க வேண்டும், அதுவும் வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது மிகவும் நல்லது. – Source: tamil.webdunia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply