தனியார் பேருந்துகளுக்கு சலுகை விலையில் டீசல்.

0

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் வெளிமாகாணங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு, இலங்கை போக்குவரத்து சாலை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்குளி, மொரட்டுவை, தலங்கம, மகரகம முதலான இலங்கை பேருந்து சாலைகளுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில், ஒரு லிட்டர் டீசல் 125 ரூபாவுக்கு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெலிசரறை கடற்படை எரிபொருள் நிரப்பு நிலையத்திலும், இவ்வாறு எரிபொருளை வழங்க கடற்படை தளபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply