இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி.

0

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த தகவல் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் மார்ச் மாதம் தினமும் சுமார் 5 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இருப்பினும் ஏப்ரல் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக குறைந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில் விமானங்களில் பயணிகள் வருவது வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே விமானங்களில் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply