நாட்டின் நெருக்கடியை தீர்க்க நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் பதவி விலகாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் பதவி விலகும்வரை போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.



