சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த அறிவிப்பு.

0

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது.

இதன்பிரகாரம் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

இதனால் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது.

அத்துடன் சாலையில் நடந்து சென்ற மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி செல்கின்றனர்.

இதுமட்டுமின்றி, அனல் காற்றும் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply