தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவது குறைவடைய கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைய டீசல் தட்டுப்பாடு காரணத்தால் 15 சதவீதமான தனியார் பேருந்துகளே நேற்றைய தினம் சேவையில் ஈடுபட்டதாக இந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் டீசல் இன்மையால் இந்த நிலைமை என்று மேலும் வீழ்ச்சி அடையக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 10 முதல் 15 சதவீதமான அளவில் இன்றைய தினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.
ஆகவே டீசலை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரிடம் கோரியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.



