நாட்டின் வைத்தியசாலைகளை மூடக்கூடிய அபாய நிலை தற்போது உருவாகியுள்ளது
இந்நிலையில் மருந்துப் பொருட்கள், எரிவாயு மற்றும் எரிபொருள் என்பன கிடைக்காவிட்டால் வைத்தியசாலைகளை மூட நேரிடும் என மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ரூக்ஸான் பெல்லன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வைத்தியசாலைகளில் நிலவி வரும் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்தையும் மூட நேரிடலாம்.
மேலும் மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் வாகனங்களில் போக்குவரத்து செய்ய போதியளவு எரிபொருள் கிடைக்கப் பெறுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



