இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்காக விசேட பண்ட வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வரி அதிகரிப்பு ஆறு மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என புதிய அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் வரி அதிகரிப்பினால் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தயிர், ஆப்பிள், திராட்சை, பாலாடைக்கட்டி போன்றவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.
மேலும் திராட்சை, ஆப்பிள், கிலோவொன்றிற்கான பண்ட வரி 300 ரூபாவாகவும் தோடம்பழம், பேரிச்சம்பழம் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாயாகவும் விதிக்கப்பட்டுள்ளது.



