வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்.

0

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று முதல் குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என பணிப்பாளர், வைத்திய கலாநிதி நந்தகுமார் கூறியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில் மாதிரி சேகரிப்பு பணியிலிருந்து வைத்தியர்கள் விலகுவதால் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது என கூறினார்.

அதேவேளை நோயாளிகளுக்கான பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply