இன்று முதல் இலங்கையில் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட தனியார் பாடசாலைகளில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் அனைத்து தரங்களில் கல்வி கற்றும் மாணவ மாணவியர் முழுமையாக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
மேலும் விதிக்கப்பட்டுள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு மாணவ மாணவியருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.



