நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல இடங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும்.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



