எரிபொருள் தட்டுப்பாடினால் ஒன்றரை லட்சம் அரச ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.

0

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலவி வருகின்றது.

இந்நிலையில் போக்குவரத்து பிரச்சினையால் சுமார் 10 வீதமான அரச ஊழியர்கள் நேற்று கடமைக்கு சமூகமளிக்கவில்லை என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முழுமையான அரச ஊழியர்களில் 15 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் பேர் பணிக்கு வரவில்லை என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவைகள் வழமை போன்று இயங்குகின்றன.

இருப்பினும் 18,000 தனியார் பேருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நேற்று இயக்கப்பட்டது.

மேலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் பணிக்கு அரச ஊழியர்களை மீள அழைப்பது தொடர்பில் கடந்த 21ஆம் திகதி தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply