மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று இடம்பெறுகின்றது.
அடுத்த கட்ட வாக்குப் பதிவு மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது.
முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. .
15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.
கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் 5,80,607 ஆண்கள், 6,28,657 பெண்கள் மற்றும் 175 திருநங்கைகள் என மொத்தம் 12,09,439 வாக்காளர்கள் 1,721 வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்குரிமையை இன்று பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



