சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம்.

0

சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் அவசரகால பதிலளிப்பு பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இன்று முதல் மின்தடை ஐந்து மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாலும், எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு இல்லாமையாலும் சுகாதாரத் துறை விரைவில் முடங்கும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுகாதாரத் துறை தற்போது வைத்தியசாலைகளில் இருக்கும் மின்பிறப்பாக்கிகள் மற்றும் பேக்கப் ஜெனரேட்டர்களையே பெரிதும் நம்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply