இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பாரிய நெருக்கடி.

0

நாடளாவிய ரீதியில் தற்போது மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படு வருகின்றது.

இந்நிலையில் குறித்த மின்துண்டிப்பு காரணமாக நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தற்போதைய மின் தடை காரணமாக பிரதேச நீர் விநியோகத்தில் குறைந்த அழுத்த நிலைமை ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் உபாலி ரத்நாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சார துண்டிப்பு காரணமாக இதுவரை பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கருத்து தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேலதிக முறைமையில் மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
.

Leave a Reply