ஜார்க்கண்டில் புயலால் படகு கவிழ்ந்தது.

0

ஜார்க்கண்டில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜம்தாரா மாவட்டத்தில் பீர்காவன் பகுதியருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில், புயல் வீசியதில் படகு கவிழ்ந்துள்ளது என்ற துரதிர்ஷ்ட செய்தி கிடைத்துள்ளது.

படகு மீட்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். படகில் மொத்தம் 18 பேர் வரை இருந்துள்ளனர்.

அவர்கள் நீர்சாவில் இருந்து ஜம்தாராவை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.

சிலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

மேலும் 16 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply