மேலதிக வரி அறவீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு.

0

மேலதிக வரி அறவீட்டு சட்ட மூலம் நாடளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சட்டமூலம் அவைத் தலைவர் தினேஷ் குணவர்தனவால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன் 2000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறவிடப்படும் குறித்த 25 சத வீத மேலதிக வரி தொடர்பான சட்ட மூலத்திற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி அளித்தது.

இருப்பினும் குறித்த வரி ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் 9 பிற நிதியங்களுக்கு அறவிடப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply