ஒமிக்ரோனின் புதிய துணைத்திரிபு மிகவும் கொடியது.

0

ஒமிக்ரோனின் புதிய துணைத்திரிபு மிகவும் கொடியது என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கோவிட்19 வைரஸ் தொற்றின் ஓர் திரிபான ஒமிக்ரோன் திரிபின் துணை திரிபாக பி.ஏ.2 என்னும் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த திரிபானது ஒப்பீட்டளவில் வேகமாக பரவக்கூடியதல்ல என்றாலும் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் அதிகம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜப்பானிய ஆய்வாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் மூலம் பி.ஏ.2 திரிபானது டெல்டா திரிபினைப் போன்று ஆபத்துக்களை ஏற்படக்கூடியது என தெரியவந்துள்ளது.

கோவிட் தடுப்பூசிகளின் மூலம் கிடைக்கப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊடறுத்து தாக்கக்கூடிய இயலுமை ஒமிக்ரோன் திரிபிற்கு காணப்படுகின்றது.

ஒமிக்ரோனின் பி.ஏ.1 உப திரிபினை விடவும், பி.ஏ.2 திரிபு ஆபத்தானது என ஆய்வுகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply