தற்போது இலங்கையில் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்நிலையில் அனைத்து மக்களும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பயணங்களைக் கட்டுப்படுத்துவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



