லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரையில் தீர்மானிக்கவில்லை என வசதி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



