உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபருவர் அதிரடி கைது.

0

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த இளைஞர் வயலில் காவல் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் தங்கியிருந்த குடிசையை சோதனையிட்டபோது அவரிடமிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தோப்பூர்- பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி பாஸ்கரன் (33வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை மூதூர் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply