கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

0

இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுடன் பயணிக்கும் சாதாரண மக்கள் எதிர்வரும் காலத்தில் பிரமுகர் முனையத்தில் இருந்து பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இனிமேல் விசேட வரப்பிரசாதம் பெற்ற உயர் அதிகாரிகள் மாத்திரமே குறித்த முனையத்தின் வழியாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் அவர்களுடன் பயணம் செய்யும் நபர்கள் உட்பட சாதாரண தர மக்கள் இணையத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply