ஹெரோயின் வைத்திருந்த நபர் அதிரடி கைது.

0

பொரளை, கோதமிபுர பகுதியில் நபர் ஒருவர் ஹெரோயினுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் பொரளை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 5 கிராம்க்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முனெடுத்து வருகின்றனர்.

Leave a Reply