நல்லூர் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு.

0

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் பிறந்த தினம் இன்று.

இந்நிலையில் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையால் நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply