முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சர் பீரிஸ் விடுத்த கடும் எச்சரிக்கை.

0

அரசாங்கத்தை நல்வழிப்படுத்துவதற்காக விமர்சனங்களை முன்வைக்கிறோம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதை ஏற்க முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் அவ்வாறு முன்வைக்கப்படும் விமர்சனங்களை நாகரிகமான முறையில் முன்வைப்பது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

Leave a Reply